×

கோலாலம்பூரில் இருந்து மதுரைக்கு 3,101 சிகப்பு காது ஆமை கடத்தி வந்த பெண் கைது

அவனியாபுரம்: கோலாலம்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு 3,101 ஆமைகளை கடத்தி வந்த பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இலங்கை வழியாக மதுரை வரும் விமானத்தில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக, மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். கொழும்புவிலிருந்து மதுரைக்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்த, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.

அப்போது, ஒரு பெண் பயணிக்கு சொந்தமான அட்டைப் பெட்டிகளில், 3,101 சிகப்பு காதுகள் கொண்ட ஆமைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றை அந்த பெண் கோலாலம்பூரில் இருந்து கொழும்பு வழியாக மதுரைக்கு கடந்தி வந்ததாக கூறினார். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.

Tags : Kuala Lumpur ,Madura ,AVANIAPURAM ,KOALAMPUR ,SRI LANKA ,Kolalampur ,Madurai Airport ,Madurai ,
× RELATED தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி...