கோவை, ஜூலை 17: மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்தவர் சரவணன்(32). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் தங்கி வேலை பார்க்கும் உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் அவர் மாடியில் வைத்து மது அருந்தி உள்ளார்.
இந்நிலையில், போதையில் இருந்த அவர் நள்ளிரவில் முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடி வலியால் துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
The post மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.
