×

காரமடை அருகே அந்தரத்தில் தொங்கும் கொண்டை ஊசி வளைவு தடுப்புச்சுவர்

 

காரமடை, மார்ச் 17: காரமடை அருகே அந்தரத்தில் தொங்கும் கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவர்கள் விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. கோவை மாவட்டம், காரமடையில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய கணுவாய் பாளையம், கட்டாஞ்சி மலை வழியாக கூடலூர் கவுண்டம்பாளையத்திற்கு செல்ல இயலும். பின்னர், அங்கிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் வாகனங்கள் மிகவும் குறைவாக பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என்பதால் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை ரங்கநாதர் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இச்சாலையை சமீப காலமாக அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

Tags : Karamadai ,Narasimhanayakkanpalayam ,Coimbatore district ,Kanuvai Palayam ,
× RELATED வாக்காளர் விழிப்புணர்வு பேரணி