- கும்பல்
- கோயம்புத்தூர்
- சூர்யா
- ஒண்டிபுத்தூர், கோயம்புத்தூர்
- தினேஷ் கார்த்திக்
- தினேஷ்
- காந்திபுரம்
- நவீன்
கோவை,மார்ச்16: கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் சூர்யா (20). தனியார் கல்லூரி படித்து வருகிறார். இவரது நண்பர் தினேஷ் கார்த்திக். மூன்று மாதங்களுக்கு முன்பு தினேஷ் காந்திபுரத்தில் உள்ள மென்ஷனில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.அப்போது அங்கு அவருடன் தங்கி இருந்த நவீன் குமார் மற்றும் கேசவன் ஆகியோர் நிலுவை வாடகை மற்றும் மின்சார கட்டணமாக ரூ.3,500 தருமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு தினேஷ், கட்டிட உரிமையாளரிடம் செலுத்தியிருந்த ரூ.5,000 முன்பணத்தில் இருந்து அந்த தொகையை கழித்து, மீதமுள்ள பணத்தை திருப்பித் தருமாறு கூறியுள்ளார். இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளரிடமிருந்து இருவரும் முழு முன்பணத்தையும் பெற்றனர். அதன் பின்னர் அந்த பணத்தை நவீன் குமார் மற்றும் கேசவன் தினேஷிடம் கொடுக்காமல் இருந்து வந்தனர். இதையடுத்து சூர்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீதமுள்ள தொகையை கேட்டபோது, கணபதியில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் அருகே வந்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
சூர்யா தனது நண்பர் சஞ்சய் என்பருடன் அங்கு சென்றபோது, முகக்கவசம் அணிந்த அடையாளம் தெரியாத 4 பேர் வந்து திடீரென அவரை தாக்கி கத்தியால் குத்தினர். அவரை காப்பாற்ற முயன்ற சஞ்சயையும் அந்த கும்பல் கத்தியால் தாக்கியது. அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
