×

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

 

கோவை, மார்ச் 17: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு‌ ஏற்படுத்தினர். இந்த பேரணியில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore ,South Assembly ,Tamil Nadu Assembly general elections ,
× RELATED வாடகை தொகை தகராறில் கல்லூரி மாணவர்களை தாக்கிய கும்பல்