கோவை, மார்ச் 18: கோவை சிங்காநல்லூர் – வெள்ளலூர் பாலத்தில் ஆட்டோ மீது பள்ளி வேன் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் மாரிசாமி (22). இவர், கோவை சத்தி ரோடு பகுதியில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் ஆட்டோவில் சிங்காநல்லூர்- வெள்ளலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பிரபல தனியார் பள்ளி வேன்- ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது. இதில், ஆட்டோவுக்குள் மாரிசாமி உடல்நசுங்கி பலியானார்.
