- P.N.palayam
- கோயம்புத்தூர்
- சின்ன ரங்கசாமி
- சின்னன்
- நாயக்கன்பாளையம், கோவனூர், புதூர்
- பெரியநாயக்கன்பாளையம்
- துளசியம்மா
பெ.நா.பாளையம், மார்ச் 20: கோவை அருகே யானை தாக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் கோவனூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னான் மகன் சின்ன ரங்கசாமி (80). மனைவி துளசியம்மாவுடன் அதே பகுதியில் தங்கியிருந்து காடுகளில் சென்று துளசி செடி பறிக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 13ம் தேதி காலை 8 மணி அளவில் காட்டுப்பகுதியில் இருந்த அவரது இடத்தில் விறகு வெட்ட சென்றுள்ளார். அப்போது வழியில் இவரை பார்த்த வனத்துறையினர் அங்கிருக்கும் ரோஸ் கார்டன் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாகவும் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர். இவருக்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது.
காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒற்றை யானை அந்த பகுதியில் வந்துள்ளது. யானையை பார்த்து ஓட முயன்ற போது கீழே தள்ளி விட்டு சென்றுள்ளது. இதில் இடுப்பு, கால், வயிறு ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு சென்ற வனத்துறையினர், சின்ன ரங்கசாமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
