×

நெல்லை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

நெல்லை, ஜூலை 16: நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நெல்லையில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்களின் குறைகளை அவர்கள் இருப்பிட பகுதிக்கே சென்ற தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நெல்லை லட்சுமி மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சுகுமார், அப்துல்வஹாப் எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட 25வது வார்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. இதே போல களக்காடு நகராட்சி கீழ கருவேலன்குளம் ராஜம் திருமண மண்டபத்தில் 1, 2வது வார்டுகளிலும், சேரன்மகாதேவி பேரூராட்சி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 1 முதல் 9 வர்டு வரையும், மானூர் ஊராட்சி ஒன்றியம் கங்கைகொண்டான் சமுதாய நலக்கூடம், பாளை. ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி சமுதாய நலக்கூடம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் லெவஞ்சிபுரம் சிஎஸ்ஐ பாரிஸ் மஹால் ஆகிய 6 இடங்களில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. 13 துறைகளின் சார்பில் இன்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்கள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், கிறிஸ்தவ தேவலாயங்களின் பணிபுரியும் உபதேசியார்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி, நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி, கவுன்சிலர்கள் சங்கர், சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சகாய ஜூலியட் மேரி, நெல்லை டவுன் பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மில்க் குமார், கவிஞர் மூர்த்தி, நெல்லை முத்தையா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Speaker ,Appavu ,Stalin ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்