×

பள்ளிகொண்டா அருகே கொள்ளையன் தாக்கியதில் படுகாயமடைந்த பெண்கள். மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிந்துரைக்க குழு அமைப்பு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

வேலூர், டிச.22: அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2025-2026ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்வெழுதவிருக்கும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் கோரும் சலுகைகள் குறித்த விண்ணப்பங்கள் பள்ளிகளிலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பங்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியுடைய விண்ணப்பங்களை தொகுத்து அனுப்ப தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த கல்வியாண்டில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது. இதன் காரணமாக, இக்கல்வியாண்டிற்கான மாற்றுத்திறனாளி தேர்வர்கள் கோரும் சலுகைகள் குறித்த விண்ணப்பங்கள் மீது ஆய்வினை மேற்கொண்டு தகுதியுள்ள விண்ணப்பங்களை பரிந்துரைக்கும் பொருட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட வேண்டும்.

இக்குழுவில், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங்கிணைந்த பள்ளி வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) மற்றும் வட்டார வளமையத்தில் பணியாற்றும் அனைத்து சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும்.
மாற்றுத்திறனாளி சலுகை கோரும் தேர்வர்களின் விண்ணப்பங்களை வட்டார வாரியாகப் பிரித்து, இக்குழுக்களைக் கொண்டு துல்லியமாக ஆய்வு செய்து தகுதியுடைய விண்ணப்பங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அப்பட்டியலினை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் வாயிலாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு, அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் குறைகளை நிவர்த்தி செய்து பின் மீண்டும் பெறப்பட்டால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, தேர்வர் கோரிய சலுகைகள் பெற தகுதியுடையவரா என்பதனை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மட்டுமே கோரப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வெழுத சலுகை கோரும் விண்ணப்பத்தில் தேர்வர் (கண் பார்வையற்றவர் எனில் தேர்வரின் இடது கையின் பெரு விரல் ரேகை), பெற்றோர், வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் அல்லது முதல்வர் ஆகியோரின் கையொப்பம் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளித் தேர்வரது மாநில அளவில் அல்லது தேசிய அளவில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மருத்துவகுழு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவகுழு சான்றிதழ், அடையாள அட்டைகளின் செல்லத்தக்க காலம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள மாதம் வரை உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Tags : Pallikonda ,Directorate of Examinations ,Vellore ,Director of ,Government Examinations ,Sasikala ,Tamil Nadu… ,
× RELATED சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம்...