×

போதைப் பொருள் சப்ளை விவகாரம் அதிமுக முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு: 5 நாளிலேயே விசாரணையை முடித்த போலீசார்

சென்னை: போதை பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் போதைப்பொருள் வழங்கிய அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் அவரது நண்பர் பிரதீப், கெவின், மேற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் 6 காவலில் எடுத்து விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 4 பேரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 5வது நாளான நேற்று விசாரணையை முடித்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நுங்கம்பாக்கம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post போதைப் பொருள் சப்ளை விவகாரம் அதிமுக முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு: 5 நாளிலேயே விசாரணையை முடித்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Srikanth ,Krishna ,Nungambakkam ,Prasad ,Pradeep ,Kevin ,West Africa ,
× RELATED சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’...