கரூர்: கரூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பக்கீர் முகமது (44). இடியாப்ப வியாபாரியான இவர், அதே பகுதியை சேர்ந்த 12, 10 மற்றும் 7 வயதான 3 சிறுமிகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 12 வயதான சிறுமியின் தந்தை, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பக்கீர் முகமதுவை நேற்று கைது செய்தனர்.
