×

தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலுக்கு பின்னரே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம்: டிடிவி தடாலடி

பவானி: ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடையாம்பட்டியில் அமமுக ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேசியதாவது: எடப்பாடி வரும் 7ம் தேதி தொடங்கும் சுற்றுப்பயணத்திற்கு அமமுகவிற்கு அழைப்பு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரும் தேர்தலில் அமையும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் கூட்டணி மந்திரிசபை தான். சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னரே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலுக்கு பின்னரே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம்: டிடிவி தடாலடி appeared first on Dinakaran.

Tags : Chief Ministerial ,National Democratic Alliance ,TTV Thadaladi ,Bhavani ,AMMK ,Erode ,Kadaiyampatti ,general secretary ,TTV ,Dinakaran ,Edappadi… ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...