×

கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்தவர் பேராசிரியர் அன்பழகன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்தவர் பேராசிரியர் அன்பழகன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள். என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை. கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Anbazhagan ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி