×

திருப்பதி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தள பதிவு

சென்னை: திருப்பதி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: திருப்பதி-ராமேஸ்வரம் இடையிலான 16779, 16780 என்ற எண் கொண்ட ரயிலானது, போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென்பதற்கான அப்பகுதி மக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் முன்வைத்திருந்தேன். திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் இயங்குகின்ற இந்த ரயிலானது, போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதன் மூலம், வர்த்தக ரீதியிலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, போளூர் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மக்களிடத்திலிருந்து வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்குகின்ற பிரதமர் மோடிக்கும், தமிழக மக்களின் கோரிக்கை ஏற்று விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்க்கும், தமிழக மக்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Tirupathi ,Rameshwaram ,Bollur railway station ,Union ,Minister ,L. Murugan ,Extla Register ,Chennai ,Union Minister ,EU ,Interior Minister ,L. Extla ,Murugan ,Rameswaram ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி