×

100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய அரசு, அதிமுகவை கண்டித்து 24ல் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது என இயங்கும் ஒன்றிய பாஜ அரசின் நாசகார சதிச் செயலையும்-அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் வரும் 24ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், தலைநகர் சென்னையிலும்-மாநிலத்தில் உள்ள அனைத்து திமுக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறும்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள்-நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ. அரசையும் – அதிமுகவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union government ,AIADMK ,DMK alliance ,Chennai ,Union BJP government ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி