×

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வு 18 மையங்களில் நாளை நடக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜூன் 14: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி I மற்றும் I ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வு நாளை (15ம் தேதி) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கேபி பொறியியல் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 18 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், போட்டித் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, இந்த தேர்வில் பங்கேற்க 5209 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் ஒரு பறக்கும் படை அலுவலர், 18 அறை கண்காணிப்பு அலுவலர்களும், 4 மொபைல் யூனிட் அலுவலர்கள் மற்றும் 18 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் செல்போன், கைகடிகாரம். கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வு மையத்துக்கு காலை 8.30 முதல் 9 மணிக்குள் இருக்க வேண்டும்.அதன் பிறகு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வு 18 மையங்களில் நாளை நடக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Tamil Nadu Public Service Commission ,TNPSC Group ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை...