×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடங்கி ஆக.12 வரை நடைபெறும்: அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடங்கி ஆக.12 வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் அனுப்பப்பட்டது. சிறப்பு கூட்டத்தொடர் நடக்காவிடில் மழைக்கால தொடரில் சிந்தூர் நடவடிக்கை பற்றி விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது தொடர்பாகவும் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் தொடர்பாகவும் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும் எனவும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடங்கி ஆக.12 வரை நடைபெறும்: அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Minister ,Kiran Rijiju ,Delhi ,Minister of Parliamentary Affairs ,India Alliance ,Operation Chintoor ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்