- உத்தரகண்ட்
- பயங்கரம் சுரங்கப்பாதை
- டெஹ்ராடூன்
- பிபல்கோட்டி
- நீர் மின்சாரம்
- திட்டம்
- உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம்
டேராடூன்: உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் பிபல்கோட்டி நீர்மின் திட்டத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. சுரங்கப்பாதைக்குள் கட்டுமான பணிகளுக்காக தொழிலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான லோகோ ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இரவு நேரப்பணிக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற லோகோ ரயில் சுரங்கப்பாதையின் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
அப்போது எதிரே பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு ரயில் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது ரயிலில் சுமார் 109 பேர் இருந்தனர். இந்த விபத்தில் 88 தொழிலாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுரங்கத்திற்குள் போதிய இடவசதி மற்றும் வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 66 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
