×

ஆபாச, சட்டவிரோத பதிவுகள் ஆன்லைன் தளங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: தவறினால் வழக்கு தொடரப்படும்

புதுடெல்லி: ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த டிசம்பர் 29ம் தேதியிட்ட ஆலோசனை குறிப்பில், ‘தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் பயனர்கள் பதிவேற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த பாதுகாப்பு கிடைக்க ஆன்லைன் தளங்கள், சட்டவிரோத தகவல் பற்றி தெரிந்தவுடன் அதை நீக்கி உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் தங்கள் இணக்க கட்டமைப்பை உடனடியாக மறுஆய்வு செய்து, தங்கள் தளங்களில் உள்ள ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்யத் தவறினால் வழக்கு தொடர்தல் உள்ளிட்ட சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் ஆபாசமான, அருவருப்பான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்காததால் ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags : Union government ,New Delhi ,Union Ministry of Electronics and Information Technology ,
× RELATED ஒடிசாவில் கூடுதல் தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம் சிக்கியது