இந்தூர்: பாஜ ஆளும் மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் மாநகராட்சி விநியோகித்த நீர் மாசடைந்து இருந்ததாகவும் அதனை குடித்த 8 பேர் உயிரிழந்ததாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பகீரத்புராவில் உள்ள பிரதான குடிநீர் குழாயின் ஒரு இடத்தில் கசிவு கண்டறியப்பட்டதாகவும், அதற்கு மேலே கழிவறை கட்டப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீர் மாசடைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
