×

அமித்ஷாவை மிரட்டுகிறார் மம்தா பாஜ புகார்

புவனேஸ்வர்: பாஜ தேசிய செய்தித் தொடர்பாளரும் எம்பியுமான சம்பித் பத்ரா ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உங்களால் ஓட்டலை விட்டு வெளியே வர முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி இருக்கிறார்.

நீங்கள் (மம்தா) அமித்ஷாவை மட்டும் மிரட்டவில்லை. இந்தியாவையே மிரட்டுகிறீர்கள். மம்தா ஆட்சி, ஒரு ஹிட்லர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி. நாடு முழுவதற்கும் வழிகாட்டிய மேற்கு வங்கம் இப்போது மம்தாவால் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mamata ,Amit Shah ,BJP ,Bhubaneswar ,Sambit Batra ,Bhubaneswar, Odisha ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Union ,Home Minister ,
× RELATED ஒடிசாவில் கூடுதல் தாசில்தாரிடம் அரை கிலோ தங்கம் சிக்கியது