×

குவார்டருக்கு ரூ.11ம், புல்லுக்கும் ரூ.47ம் அதிகரிப்பு புதுவையில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: அரசுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருமானம்

புதுச்சேரி: புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள், பீர், ஒயின் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி 28ம் தேதி (நேற்று) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு புதுவை கலால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம் ஐஎம்எப்எல் வகை மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஜின், ரம் ஆகிய 750 மி.லி. மதுபான பாட்டில்களுக்கு, ரூ.10 முதல் ரூ.47 வரையும், 180 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ.3 முதல் ரூ.11 வரையும், பீர் 650 மி.லி. பாட்டில்களுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரையும், ஒயின் 750 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ.13 முதல் ரூ.26 வரையும் உயர வாய்ப்புள்ளது. இந்த வரி உயர்வின் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மதுபான தொழிற்சாலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான உரிம கட்டணம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் கலால் துறையின் இணையதளத்தில் பொது மக்களின் தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குவார்டருக்கு ரூ.11ம், புல்லுக்கும் ரூ.47ம் அதிகரிப்பு புதுவையில் மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: அரசுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருமானம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Deputy Commissioner ,Matthew Francis ,India ,Union Territory of Puducherry ,Dinakaran ,
× RELATED எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில்...