×

ராகுல்காந்தி பார்ட் டைம் அரசியல்வாதி: நிதின் நபின் விமர்சனம்

பாட்னா: பாஜவின் தேசிய செயல் தலைவராக கடந்த 14ம் தேதி நிதின் நபின் நியமிக்கப்பட்டார். செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நிதின் சொந்த மாநிலமான பீகாருக்கு நேற்று வருகை தந்தார். பாட்னாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்றபடி சாலைகளின் இருபக்கங்களிலும் திரண்டு இருந்த பாஜ தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

வாகன அணிவகுப்பின்போது மலர்த்தூவி அவரை வரவேற்றனர். தொடர்ந்து அவரது சட்டமன்ற தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய நிதின் நபின் பேசுகையில், ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பகுதி நேர அரசியல்வாதி. நாட்டில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புக்களை அவதூறு செய்கிறார். வெளிநாட்டு பயணங்களில் தனது தாய்நாட்டை பற்றி அவதூறாக பேசுகிறார்” என்றார்.

Tags : Rahul Gandhi ,Nitin Nabin ,Patna ,BJP ,Nitin ,Bihar ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி