×

ஒடிசாவில் 22 மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்

மால்காங்கிரி: ஒடிசாவில் 22 மாவோயிஸ்ட்டுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளனர். ஒடிசாவில் மால்காங்கிரி மாவட்டத்தில் 22 மாவோயிஸ்ட்டுக்கள் நேற்று டிஜிபி முன்னிலையில் சரண் அடைந்தனர். இவர்கள் தங்களிடம் இருந்த ஆயுதங்கள், 150தோட்டாக்கள், 20கிலோ வெடிப்பொருட்கள், அம்மோனியம், ஜெலட்டின் குச்சிகள், குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசில் ஒப்படைத்தனர்.

சரண் அடைந்தவர்களின் பெரும்பாலானோர் சட்டீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஒடிசாவில் இருந்து செயல்பட்டு வந்துள்ளனர். ஒடிசா அரசானது நவம்பர் 27ம் தேதி மாவோயிஸ்ட்டுக்கள் சரண் அடைவதற்கான வெகுமதி தொகையை திருத்தி அமைத்தது. இது சட்டீஸ்கரில் வழங்கப்படும் தொகையை விட 10 மடங்கு அதிகமாகும்.

Tags : Odisha ,Malkangiri ,Maoists ,Malkangiri district ,DGP ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி