புதுடெல்லி: சோலார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைப் பொருட்களுக்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் அளித்துள்ளது. சோலார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான பொருட்களுக்கான இந்தியாவின் வரி அல்லது இறக்குமதி வரி விதிப்பு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிபந்தனையாகக் கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை சீனப் பொருட்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாக உள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் துறைகளின் கீழ் வரும் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக சீனா உள்ளது. இதனால் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் நேற்று சீனா புகார் அளித்தது. இதை தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பின் தகவல்தொடர்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு விதிகளின் கீழ் இந்தியாவுடன் கலந்தாலோசிக்கும்படி சீனாவுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
