- திருப்பதி கோவிந்தராஜசாமி கோயில்
- திருமலா
- கோவிந்தராஜ சுவாமிகள்
- கோவில்
- திருப்பதி ரயில் நிலையம்
- திருமலை திருப்பதி
திருமலை: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் கோபுரத்தின் மீது தகடு பதிக்கும் பணியில், 50 கிலோ தங்கம் மோசடி நடந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் எதிரே 1000 ஆண்டுகள் முந்தைய கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு மூலவர் கருவறை மேல் உள்ள விமான கோபுரத்தில் தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 50 கிலோ தங்கம் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 9 அடுக்குகளில் செய்யப்பட வேண்டிய தங்க முலாம் 2 அடுக்குகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜிலென்ஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல சுவாமி சிலைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 2 அடுக்குகள் மட்டுமே தங்க தகடு பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் 9 அடுக்குகளுக்கு போதுமான தங்கத்தைக் பெற்றுக் கொண்டு, 2 அடுக்குகளை மட்டுமே பயன்படுத்தி சுமார் 50 கிலோ தங்கம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
எனவே கடந்த ஆட்சியில் நடந்த நெய், பரக்காமணி, சால்வை மோசடி போன்று தற்போது கோயில் கோபுரத்தில் தங்க தகடு பதிக்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாகவும், எனவே இந்தப் பணிகளை மேற்கொண்ட அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் அப்போதைய இ.ஓ. தர்மா ரெட்டி ஆகியோரிடம் விசாரித்தால் முழு மோசடி தெரிய வரும். எனவே அவர்களை விசாரிக்க விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
