×

சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி, மே 21: கிருஷ்ணகிரியில் நாளை(22ம் தேதி) சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் திட்ட பணிகளை களஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் காந்திராஜன் தலைமையில், குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நாளை (22ம் தேதி) வருகை தருகின்றனர். இந்த மதிப்பீட்டுக்குழுவினர், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மதிப்பீட்டுக்குழுவினர் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில், எம்பி, எம்எல்ஏக்கள், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Assembly Evaluation Committee ,Krishnagiri ,District ,Dinesh Kumar ,Tamil Nadu Assembly Evaluation Committee ,Gandhirajan ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்