- திமுக
- பூத்
- போச்சம்பள்ளி
- திமுக வாக்குச்சாவடி
- காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம்
- என்னுடைய வாக்குச் சாவடி
- ராமர்கோட்டை
- சோபனூர்
- தாட்ராலி
- கிழக்கு ஒன்றியம்…
போச்சம்பள்ளி, டிச.25: காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தட்ரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராமர்கொட்டாய், சோபனூர், தட்ரஅள்ளி ஆகிய கிராமங்களில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ், ஸ்ரீதர், அண்ணாமலை, பத்மினி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு, திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், நான்கு ஆண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்தும், வீடு வீடாக சென்று விளக்கி கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என பேசினார். கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மாதவி முருகேசன், வெண்ணிலா முருகேசன், பாஸ்கர், குமார், தமிழ்செல்வன், ஜலபதி, ஸ்ரீதர், அருள், அண்ணாமலை, சரவணன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
