- எம்.ஜி.ஆர் நினைவு நாள்
- கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.
- எம்.ஜி.ஆர்
- ராயக்கோட்டை சாலை
- முன்னாள் அமைச்சர்
- பாலகிருஷ்ணா ரெட்டி
- கிருஷ்ணகிரி...
ஓசூர், டிச.25: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட அலுவலகம், ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில், ஜெயப்பிரகாஷ், ராமு, ராஜி, சிட்டி ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
