- திராவிடர் கழகம்
- ஓசூர்
- பெரியார் உலகம்
- அண்ணா சிலை
- ராம்நகர், ஓசூர்
- வனவேந்தன்
- திராவிடர்
- கஜாகம்
- ஜனாதிபதி
- வீரமணி.…
ஓசூர், டிச.30: திராவிடர் கழக பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா, ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ரூ.14 லட்சம் நிதியை மாவட்ட தலைவர் வனவேந்தன், திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட கி.வீரமணி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார். மீண்டும் தமிழகத்தில் ஏன் வரவேண்டும் என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா. மணி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஞானசேகரன், திராவிடர் கழக நிர்வாகிகள் செல்வம், கண்மணி, சிவந்தி அருணாச்சலம், முனுசாமி, சங்கீதா, செல்வி, கிருபா, எழிலன், அன்பழகன், ஊமை ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
