×

ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்

கிருஷ்ணகிரி, டிச.30: கிருஷ்ணகிரி ராசு வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜெரீனா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களது மகன் ஜான் பாஷா(23) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், கடந்த 26ம் தேதி பழையபேட்டையில் உறவினர் வீட்டில் இருந்த ஜான்பாஷா மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது பெற்றோர், இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், சூளகிரி அடுத்த பீர்ஜேபள்ளியைச் சேர்ந்தவர் இளவரசன்(22). இவர் ஏனுசோனை பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வேலைக்கு சென்ற இளவரசன், மாலையில் வீடு திரும்பவில்லை. நண்பர், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்ைல. இதுபற்றி அவரது தந்தை உமாபதி, சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Mohan ,Rasu Street, Krishnagiri ,Zerina ,John Pasha ,Palayapet… ,
× RELATED பி.எம்.சி டெக் கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு தினம்