- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- செங்கம் UAV அலுவலகம்
- செங்கம்
- ஊரக
- Thandarampattu
- பூப்பாளையம் உரட்சி ஒன்றியம்
- செங்கம் உராட்சி ஒன்றிய அலுவலகம்
- மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
- தின மலர்
செங்கம், மே 16: செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பயனாளிகளுக்கு விரைந்து பில் தொகைகளை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள திட்ட பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக வரி வசூல் இனங்கள் விரைந்து வசூல் செய்துவிட வேண்டும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் 15ஆவது மானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணி என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மணி, மேற்பார்வை பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செங்கம் மிருளாலினி மரியதேவானந், தண்டராம்பட்டு பரிமேலழகன், ரவிச்சந்திரன், புதுப்பாளையம் சம்பத், நிர்மலா மற்றும் பொறியாளர்கள், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கள ஆய்வு செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் appeared first on Dinakaran.
