×

இந்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் 3 பெண்கள் உட்பட 33 பேர் கைது செய்யாறில் பாஜக அரசை கண்டித்து

செய்யாறு, டிச.24: செய்யாறில் பாஜக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்கத்தினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய தொழிற்சங்க மையம் சிஏடியு சார்பில் பாஜக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் வி.சங்கர் தலைமையில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு இரவு நேர பணி திணிப்பதை கைவிட வேண்டும். மேலும், மின்சார திருத்த சட்டம் 2025 கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். நிரந்தர தன்மை உள்ள பணியிடங்களில், கான்ட்ராக்ட் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் வாழ்வை சீரழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 33 பேரை கைது செய்தனர்.

Tags : trade unionists ,BJP government ,Cheyyar ,Indian Trade Union Center ,CATU ,secretary… ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ...