தண்டராம்பட்டு, டிச.24: தண்டராம்பட்டு அருகே மதுபாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த குங்கிலியநத்தம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வாணாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் குங்கிலியநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா(61), சக்கரவர்த்தி(41), மொய்யூர் கிராமத்தை சேர்ந்த அம்பிகா(35), வரகூர் கிராமத்தை சேர்ந்த சுசிலா(41) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
