- முன்னாள்
- பிரதம செயலாளர்
- இறையன்பு
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வெங்கடாசலம்
- வெங்கடாசலம்…
- முன்னாள் தலைமைச் செயலாளர்
சென்னை: தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வளைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் தந்தையார் வெங்கடாசலம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து, தனது உழைப்பால் தனது இரு மகன்களை இந்திய ஆட்சிப் பணியாளர்களாகவும் – மகள்களை பேராசிரியர்களாகவும் ஆக்கிச் சமூகத்துக்கு அளித்த பொறுப்புமிக்க தந்தை ஆவார். தமது பிள்ளைகள் அனைவருக்கும் தூய தமிழில் இனிமையான பெயர்களை சூட்டி தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் இறையன்பு, திருப்புகழ் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
The post முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவின் தந்தை மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.
