×

யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும்; மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது: விஜயை மீண்டும் விளாசிய செல்லூர் ராஜூ

மதுரை: யாருக்கு யார் போட்டியென எங்களுக்கு தெரியும். மின்மினி பூச்சிகள் வெளிச்சம் தராது என செல்லூர் ராஜூ தெரிவித்தார். ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தரிசனம் செய்தார். அவரிடம் நிருபர்கள், ‘தவெகவும், திமுகவும்தான் போட்டி என்று விஜய் சொல்கிறாரே’ என்றனர். அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:

மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். யாருக்கு யார் போட்டி என்று களத்தில் பணியாற்றும் எங்களுக்குத்தான் தெரியும். மக்கள்தான் எஜமானர்கள். இது சினிமா வசனமல்ல. தவெகவும், திமுகவுக்கும்தான் போட்டி என்று விஜய் சொன்னாரான்னு தெரியலை. நீங்கள் கேட்கிறீர்கள், ஊடகங்கள் ஏதாவது ஒரு கேள்வியை போட்டுட்டு, செல்லூர் ராஜூ இதை சொன்னார், விஜயை சாடினார் என்பீர்கள்.

முதல் ஆண்டுல துவக்கத்தில் இதெல்லாம் ஏப்பா? எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கணும்னு வேண்டிக்கிட்டு வந்திருக்கோம். சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் இருக்கும். எல்லோருக்கும் ரசிகர்கள் வருவார்கள். ரசிகர்கள்னு இருந்தா, நடிகர் முகத்தை பார்க்க சினிமா கவர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மக்கள் வருவார்கள். அமிதாப்பச்சன் வந்தாலும் கூட்டம் கூடும். எவ்வளவு காலம் சினிமாவில் அவர் இருக்கிறார். மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நம்மை ஆளக்கூடிய நிர்வாகத்திறன் படைத்தவர்கள் யார் என்பதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Sellur Raju ,Vijay ,Madurai ,Former ,AIADMK ,minister ,Madurai Meenakshi Amman temple ,English New Year ,
× RELATED திட்டமிட்ட சிறப்பான...