×

திருவாரூர் மாவட்டத்தில் மே.1 ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மே1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையாளர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு, மே தினத்தை முன்னிட்டு மே1ம்தேதி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்த்திற்கும் விடுமுறைதினமாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் அன்றையதினங்களில் மேற்படி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல் 3 பெற்ற மதுக்கூடங்களையும் மூட வேண்டும் எனவும், மேற்படி தினத்தில் மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எப்.எல்2, எப்.எல் 3 உரிமம் பெற்ற மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுகூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்தல் மற்றும் உரிமங்களை ரத்துசெய்தல் மற்றும் உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் மே.1 ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Holiday for Tasmak shops ,Thiruvarur district ,Thiruvarur ,Collector ,Mohanachandran ,Tasmak ,Thiruvaroor district ,Chennai Commissioner for Alcohol Abuse and Preparedness ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...