- திமுக அரசு
- முதல் அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- துணை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்றைக்கும் அரசு அலுவலர், ஆசிரியர்களின் நலன்காப்பதில் உறுதியுடன் செயல்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களின் 23 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களுக்கான புத்தாண்டு-பொங்கல் பரிசாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்புக்கு நன்றி கூறும் வகையில், ஜாக்டோ-ஜியோ, FOTA – GEO, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்தனர்.
அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி நம்முடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தோம். ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் பாரபட்சம்-நிதி குறைப்பு என தமிழ்நாடு அரசு சந்திக்கும் சவால்களுக்கு இடையே, அரசு அலுவலர்கள் – ஆசிரியர்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நம் முதல்வர் நிறைவேற்றித் தந்துள்ளார்.
கலைஞரின் வழியில், நமது முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, என்றைக்கும் அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களின் நலன்காப்பதில் உறுதியுடன் செயல்படும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
