×

ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே: ப.சிதம்பரம் கருத்து

சென்னை: ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழு விவரங்கள் வெளிவந்துள்ளன.

இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு.

சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம். செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : P. Chidambaram ,Chennai ,Former Union Minister ,Former Union Finance Minister ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!