×

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம்: அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம் செய்து, புதிய தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.மாளிகையில் வரும்

9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 11ம் தேதி மற்றும் 12ம் தேதி ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முறையே வரும் 12ம் தேதி மற்றும் 24ம் ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேர்காணல் நடைபெறும்.

12ம் தேதி காலை 9.30 மணி முதல் விருதுநகர் மேற்கு மாவட்டம், 10.15 மணி- கடலூர் கிழக்கு,கடலூர் வடக்கு. 11 மணி கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு. 11.45 மணி நாகப்பட்டினம், மயிலாடுதுறை. 12.30 மணி திருச்சி புறநகர் வடக்கு, பிற்பகல் 4 மணி முதல் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, 4.45 மணி பெரம்பலூர், அரியலூர். 5.30 மணி கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, 6.15 மணி தர்மபுரி மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறும்.

24ம் தேதி காலை 9.30 மணி முதல் விழுப்புரம், 10.15 மணி கள்ளக்குறிச்சி, 11 மணி தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு. 11.45 மணி தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, 12.30 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு. பிற்பகல் 4 மணி முதல் திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம். 4.45 மணி வேலூர் மாநகர், வேலூர் புறநகர். 5.30 மணி ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு. 6.15 மணி திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.

இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்திட, `தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும்’, விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Chennai ,Tamil Nadu Assembly General ,Election ,Puducherry ,Kerala ,
× RELATED சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது..!!