×

பள்ளி கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல் வார இறுதி நாட்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் சுவாமி தரிசனம் செய்ய நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி, அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும்போது தரிசன வரிசையில் பக்தர்களுக்கு கூட்டம் காணப்பட்டது. படிப்படியாக காலை 11 மணியளவில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது.

மேலும், இரவு நேரங்களில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் அதிக அளவில் வெப்பம் காணப்படுவதால் தற்போது இரவு நேரத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பள்ளி கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Panjbootha ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...