- மதுரை
- மூட்டா
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- ஜனாதிபதி
- பெரியசாமி ராஜா
- பொதுச்செயலர்
- செந்தாமரைக்கண்ணன்
- பிராந்தியத் தலைவர்கள்
- வில்சன் பாஸ்கர்
- கவிதா
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…
- தின மலர்
மதுரை, ஏப். 24: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மூட்டா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, பொது செயலாளர் செந்தாமரை கண்ணன், மண்டல தலைவர்கள் வில்சன் பாஸ்கர், கவிதா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெரியதம்பி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதில், சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் பணிபுரியும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் மற்றும் நிலுவை தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
The post மதுரையில் மூட்டா சார்பில் நிலுவை ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
