×

தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை வழங்கியது தவறு : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை : கச்சத்தீவை மீட்க அதிமுக என்ன நடவடிக்கை எடுத்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இந்தியா – இலங்கை எல்லை பிரிக்கப்பட்டபோது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி கச்சத்தீவு இந்திய அரசுக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ சொந்தமானது அல்ல. 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே என்ன செய்தீர்கள் என இபிஎஸ் கேட்டார்.ஆட்சியில் இருந்தது யார் என்பது முக்கியமல்ல; மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே நோக்கம். தேர்தலுக்காக தீர்மானம் கொண்டு வரும் கட்சி திமுக அல்ல. பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வதால்தான் கச்சத்தீவு தீர்மானத்தை கொண்டு வந்தோம். கச்சத்தீவை மீட்க அதிமுக என்ன நடவடிக்கை எடுத்தது?.

ஒரு மாநிலத்துக்கு சொந்தமான இடத்தை வேறு நாட்டுக்கு தர அம்மாநிலத்தை கேட்க வேண்டும் என்றும் வேறு நாட்டுக்கு இடத்தை தர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரியவில்லை. சுச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசின் சம்மதமும் பெறப்படவில்லை. தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை வழங்கியது தவறு. கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கப்பட்டது, தமிழ்நாட்டு மக்களுக்கு நஷ்டம். கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை வழங்கியது தவறு : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Katchatheevu ,Tamil Nadu government ,Law Minister ,Raghupathi ,Chennai ,AIADMK ,Katchateevu ,Sri Lanka ,India-Sri Lanka ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...