×

பணியில் அலட்சியம் காட்டியதாக மதுரை கூடல் புதூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

மதுரை: கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்யாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக மதுரை கூடல் புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மாநகரக் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சுள்ளான் பாண்டி என்பவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

The post பணியில் அலட்சியம் காட்டியதாக மதுரை கூடல் புதூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Tags : Madurai Koodal Budur Police ,Madurai ,Commissioner ,Inspector ,Balamurugan ,Sullan Bandi ,Dinakaran ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது