- புதிய ஆண்டு
- ஆலந்தூர்
- சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு
- சிறப்பு அதிரடிப்படை போலீசார்
- சென்னை
- பரங்கிமலை போலீஸ்
ஆலந்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக போதை பொருள் விற்கப்படுவதாக சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு தனிப்படை போலீசாரும் பரங்கிமலை போலீசாரும் இணைந்து பழைய குற்றவாளி ஒருவரை நேற்று போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வேண்டும் எனக் கேட்டனர். அந்த நபர் கத்திப்பாரா மேம்பாலம் அருகே வருமாறு கூறினார்.
இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார் காரில் வந்தசிட்லபாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத்(27) என்பவரை கைது செய்தனர். மேலும், போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடைய குரோம்பேட்டையை சேர்ந்த கார்த்திக்(28), விக்னேஷ்(24), தி.நகரை சேர்ந்த தினேஷ்(29), திருவல்லிகேணியை சேர்ந்த முகமது நிசாம்(33) ஆகியோரை கைது செய்தனர். மேலும், 160 கிராம் கஞ்சா, 2.5 கிராம் மெத்தபெட்டமைன், 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
