×

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரவுடிகள் வேட்டை: 33 பேர் கைது

பெரம்பூர்: திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக இன்ஸ்பெக்டர் கிருபாநிதிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா(எ) சைக்கோ சத்தியா(27), மணி(எ) ரெட்ஹில்ஸ் மணி(21), சூரிய பிரகாஷ்(24), அஸ்வின்(21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முல்லை நகர் சந்திப்பு பகுதியில் தொடர் குற்ற செயல் ஈடுபட்டு வந்த ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்(எ) குள்ள பிரவீன்(21), விக்னேஷ்(எ) மாவு விக்கி(21), ராம்குமார்(21), சுரேஷ்(19), பாலாஜி(19), அபிஷேக்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பத்து வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

ஆர்.ஆர். நகர் குப்பைமேடு பகுதி அருகே தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த விஜய்(எ) ஜாக்கி(23), லாரன்ஸ்(எ) வெள்ளை(23), ராஜேஷ்(எ) சொல்யூஷன் ராஜேஷ்(20), ஜெயச்சந்திரன்(20), மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகளான பாலாஜி(20), குருமூர்த்தி(19), அஜித்(21) ஆகியோரை கைது செய்துனர்.குட்கா விற்பனையில் ஈடுபட்ட கோழி பாபு(29), அருண்(எ) இமான்(20), நவீன்(எ) புல்லாத்தி(19) ஆகியோரை பேசின்பிரிட்ஜ் போலீசார் கைது செய்தனர். கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்ற ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியை சேர்ந்த குபேந்திரன்(40) என்பவரை கைது செய்தனர். பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புளியந்தோப்பு வஉசி நகரைச் சேர்ந்த கருப்பா(எ) ஆபாவாணன்(25), சீனா(எ) அஜித்குமார்(24), ஜீவா(26), அஜித்(32), கிரிதரன்(20), விஜய்(19) ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.

பணந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஓட்டேரி பழைய வாழைமாநகரைச் சேர்ந்த கலைவேந்தன்(28), கமலேஷ்(19), குணாளன்(21), அருண்(எ) தனுஷ்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சாரதி(எ) கோழிமண்டை சாரதி(22) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்தனர்.

Tags : Rauds ,Puliantopu Police District ,Eve ,Perampur ,Satya ,Psycho ,Mani (A) Redhiya ,Mundinam Thiruvechadu ,Inspector ,Kiribanidhi ,Thiruvika Nagar Police Station ,Als Mani ,Sooriya Prakash ,Aswin ,
× RELATED திருத்தணியில் வாலிபரை...