×

கூடலூரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறை!!

நீலகிரி: கூடலூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தண்டனை பெற்றுத்தந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11.05.2020 மம் தேதி அன்று கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சார்த்த 17 வயது சிறுமி தன்னை 8.5.2020 ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டை சார்ந்த ராமகுட்டி என்பவரது மகன் சந்தோஷ் (23) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண் 07/2020 /பி 5(n) 6 of POCSO Act and 363 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடித்து 26.03.2025 ம் தேதி உதகை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது மகிளா நீதிபதி அவர்கள் குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

The post கூடலூரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறை!! appeared first on Dinakaran.

Tags : NILAGIRI DISTRICT POLICE DEPARTMENT ,KOODALUR ,Nilgiri ,Nilgiri District Police Department ,Koodalur All Girls ,Station ,Nilgiri District Koodalur Indkot Koodalur All Women Police ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணியில் போதை பொருள்...