×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கழுகுமலை,மார்ச் 27: கழுகுமலையில் நோய் கொடுமையால் மில்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை-எட்டயபுரம் ரோடு விஜயன் மகன் சிங்கராஜ் (35). இவர் கோவில்பட்டி நாலாட்டின்புதூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி நாகஜோதி (30) மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிங்கராஜ், நீண்டகாலமாக முதுகுவலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையிலும் நோய்பாதிப்பு குறையவில்லையாம்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன், வீட்டில் தந்தை தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதையடுத்து குடும்பத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கழுகுமலை போலீசார், சம்பவ இடம் சென்று சிங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kalagumalai ,Singaraj ,Vijayan, Kalagumalai-Ettayapuram Road, Thoothukudi district ,Nalattinputhur, Kovilpatti ,Nagajyothi… ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...