தூத்துக்குடி, டிச. 19:தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன் பலியானார். பாஞ்சாலங்குறிச்சி சந்தையார் குடியிருப்பைச் சேர்ந்தவர் வீரபொம்மு (55). இவர், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் செல்லும்போது பின்னால் வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமாரகிரி நடுத்தெருவைச் சேர்ந்த ராமசுப்பு (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
