திருவேங்கடம், டிச. 19: திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் கலிங்கப்பட்டி அருகே கொருக்காம் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்து கொண்டு செல்வது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் கொருக்காம் பட்டி நடுத்தெருவை சேர்ந்த மாயமன் மகன் வேல் முருகன் (40), திருவேங்கடம் அருகேயுள்ள குலசேகரன் கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜ்குமார்(25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணன், தங்கேஸ்வரன், ஆசைத்தம்பி, சுந்தர்ராஜ், சிதம்பரம், ராமசாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், 36வது பூத், வடக்கு ஒன்றியம் 40வது பூத் பகுதிகளில் நடந்த ஆலோசனை கூட்டங்களிலும் தொகுதி பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன் முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிவன்பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன் செல்வன் செய்திருந்தனர்.
